மின்சாரம் வழங்காததால் தொழில் செய்ய முடியாமல் பறிதவிப்பு
சேலம் பெரிய சீரகாபாடி ,நாடார் தெரு, நவப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி கணவர் பெயர் சேகர், சேட்டு தந்தை பெயர் சின்னுசாமி, சித்துராஜ் தந்தை பெயர் ராமசாமி, மற்றும் கார்த்திக் ,விஜயகுமார் ஆகியோர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து அதற்குண்டான பணம் செலுத்தி ரசீது வாங்கி வைத்துள்ளோம். பணம் கட்டி ஒன்றரை வருடம் ஆகியும் எங்களுக்கு மின் இணைப்பு வழங்காமல் கால தாமதம் செய்து வருகிறார்கள் .அதனால் மாவட்ட ஆட்சியரை அணுகி மின் இணைப்பு வழங்க கேட்டு புகார்மனு அளித்தோம். அதற்கு மாவட்ட ஆட்சியர் பார்க்கலாம் என்று கூறிய நிலையில் எங்கள் மனுவை நிலுவையில் வைத்து விட்டார்கள். ஆதலால் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தோம். உச்ச நீதிமன்றம் மின் இணைப்பு வழங்கலாம் என்ற தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பின் நகலை மின் பகிர்மான வட்டத்தில் சமர்ப்பித்தோம். கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் மின் இணைப்பு வழங்காமல் எங்களை அலைக்கழித்து வருகின்றனர். இதனால் கடன் வாங்கி தறி இயந்திரம் போட்டு தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றோம். மின் இணைப்பு இல்லாததால் எங்களது தொழில் முடங்கியுள்ளது. எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ வழி இல்லாமல் தவித்து வருகின்றோம் என கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.