*ஆரணி பழைய பேருந்து நிலையம் மணி கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீது தாக்குதல் நிகழ்த்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்*
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் மணி குண்ட அருகே மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீது தாக்கியதாக பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியூம் மணிப்பூரில் பிஜேபி அரசை பதவி விலக கோரியும் ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பு.சார்லஸ் நகரச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்