வளர்ந்து வரும் திருத்தணி நகராட்சி ஒரு கோயில் நகரமாக உள்ளதால் தினசரி வரும் பக்தர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக நகரத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களின் வருகை. இது போன்ற நிகழ்வுகளால்  நெருக்கடி மற்றும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. தற்போது உள்ள பேருந்து நிலையம் போதுமானதாக இல்லாததாலும். கூடுதலான பேருந்துகள் நிற்கவும் மற்றும் பயணிகள் வசதிக்காகவும் ஏற்புடையதாக இல்லை என்ற காரணத்தினால். அரக்கோணம் சாலை அரசு பேருந்து பணிமனை அருகே ரூபாய் 12 கோடியே 74 லட்சம் செலவில் பணிகள் துவக்கப்பட்டு விரைவாக நடைபெற்று வருகின்றன  4. 60 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த பேருந்து நிலையம் அதிகப்படியான பேருந்துகள் நின்று செல்லவும் மற்றும் இருசக்கர வாகனங்கள் கார்கள் போன்ற வாகனங்கள் நிற்கவும் கடைகள். குடிநீர். நவீன கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளோடு கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டப்பட்டு வரும் இந்த பேருந்து நிலைய பணிகளை திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பொது மக்களுக்கு போதுமான தேவையான வசதிகளையும். கட்டமைப்பு பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் எனவும். குறிப்பிட்ட காலத்தில் பேருந்து நிலையத்தை  பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் திருத்தணி ஒரு கோயில் நகரம் என்பதால் அதை அடையாளப்படுத்தும் வகையில் திருத்தணி முருகன் கோயில் கோபுரத்தை வடிவமைத்து பேருந்து நிலையத்தின் முகப்பில். பொருத்த உள்ளதாகவும் . அவர் கூறினார். அப்போது நகராட்சி துணைத் தலைவர் ஆ. சாமி ராஜ் நகராட்சி ஆணையர் .நா. அருள். நகராட்சி பொறியாளர் தயாநிதி. மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.