தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமை தாக்குதலை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமை வகித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மனிப்பூர் மாநில அரசு மற்றும் மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன்,  சுரண்டை நகர்மன்றத் தலைவர் வள்ளி முருகன், பொதுச் செயலாளர் சந்தோஷ், பேச்சாளர் பால்துரை, நகரச் செயலாளர் நாகராஜன், பொருளாளர் ஈஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் சட்டநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் காதர்மைதீன், சுப்பிரமணியன், ரபீக், உமாசங்கர், காஜாமைதீன் கீழப்பாவூர் பேராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் சின்னராஜா, கோடீஸ்வரன், தாமோதரன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.