தனது பல்வகைப் பிரிமியம் வாகனங்களுக்கான சலுகைகளை
விரிவுபடுத்தும் வகையில், மகாவீர் குழுமத்தின் ஓர் அங்கமான ஆதீஷ்வர் ஆட்டோ ரைட்
இந்தியா நிறுவனம் (ஏஏஆர்ஐ), தனது புத்தம் புது மல்டி-பிராண்ட் சூப்பர் பைக் தனியுமைக்
கிளையைத், சென்னையில் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா
முழுவதும் பல்வேறு டச்-பாயிண்ட் கிளைகளைத் திறப்பதன் மூலம் ஒவ்வொரு
வாடிக்கையாளரும் சூப்பர் பைக் அனுபவத்தைப் பெறுவதை உறுதிப்படுத்தும் நிறுவனத்தின்
உறுதிமொழியைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகிறது.
‘ராஜ்கமல் ஆட்டோமோடிவ்’ என்னும் பதாகையின் கீழ் அதி நவீன ஸ்டேட்-ஆஃப்-தி ஆர்ட்
ஷோரூம், சென்னை 600035 நந்தனம் அண்ணாசாலை பழைய எண் 428 புதிய எண் 781இல்
இயங்குகிறது. மோட்டோ மோரினி, ஜோண்ட்ஸ் மற்றும் சமிபத்திய அறிமுகமான க்யூஜே
மோட்டார் உள்ளிட்ட பன்னாட்டு பிராண்ட்களின் சூப்பர் பைக்குகள் இங்கே காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பங்கேற்று ஆதீஷ்வர் ஆட்டோ ரைட் இந்தியா நிறுவனத்தின் மேலாண்
இயக்குனர் விகாஸ் ஜபாக் பேசுகையில் ‘எங்கள் வாடிக்கையாளர்களுடனான உறவுகள்
மூலம் விழுமியங்களை உருவாக்குவதே ஆஷீஷ்வர் ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முக்கிய
முனைவுகளில் ஒன்றாகும், இந்தியா முழுவதுமுள்ள மோட்டோ வால்ட் ஷோரூம்கள்
அறிமுகத்தின் பின்னணியிலுள்ள எங்கள் தொலைநோக்குப் பார்வையும் சிந்தனையும் ஆகும்’
என்றார்.
புதிய விநியோகயுரிமை குறித்துச் சென்னை மோட்டோ வால்ட் டீலர் பிரின்சிபல் பங்கஜ்
மோனாட் கூறுகையில் ‘மோட்டோ வால்ட் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து

செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது வாடிக்கையாளர் சார்ந்த அணுகுமுறை மூலம்
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிக்கலற்ற பிரிமியம் விற்பனை மற்றும் பழுது நீக்கும்
சேவைகளை வழங்குவதே எங்கள் நோக்கமாகும். வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த
உரிமையாளர் அனுபவத்தை வழங்கும் வகையில், எங்களது சென்னை மோட்டோ வால்ட்
நிறுவன தொழில்முறை வல்லுனர்கள் அனைவதும் பன்னாட்டுத் தரக் கட்டுப்பாடுகளுக்கு இணங்கப் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்’ என்றார்