நண்பர்களுடன் சுற்றுலாவுக்கு சென்றபோது பிசியோதெரபி மாணவனுக்கு நிகழ்த்த சோகம் – பேச்சிப்பாறை அணை நீரில் மூழ்கி பலி .குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை நீர் பிடிப்பு பகுதியில் வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் சுற்றுலா வருவது வழக்கம்.இந்நிலையில் இன்று அணைக்கு குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி மாயமானார். உடன் சென்ற சக மாணவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கு வந்த உள்ளூர் மக்கள் பேச்சிப்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொது மக்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரம் கடந்து மாணவனை உயிரிழந்த நிலையில் மீட்டனர். உயிரிழந்த மாணவன் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியை சேர்ந்த ரோஜன் ராஜ் என்பவர் அவார் . இவர் களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோ தெராப்பி பயின்று வருகிறார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர்களுடன் சுற்றுலாவுக்காக அணையில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.