கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவருக்கு பாராட்டு விழா
சென்னை, பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் புதிய கவிதை சாரல் கவிஞர்கள் அமைப்பு சார்பில் கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட தொழிலதிபர் பம்மல் லயன்.பி.ஆர்.எஸ்.சரவணராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.புதிய கவிதை சாரல் கவிஞர்கள் அமைப்பின் நிறுவனர் ஆசிரியர்.அசோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல கவிஞர்கள் கலந்து கொண்டு மரத்தின் அவசியம், பயன் என்ற தலைப்பில் கவிதை உரை ஆற்றினர்.இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை. ரேகாநாயர், வழக்கறிஞர். லோகநாதன், சமூக ஆர்வலர் பம்மல். கந்தசாமி, ஆகியோர் கலந்து கொண்டு கிரீன் சிட்டி அரிமா சங்கத் தலைவராக பதவி ஏற்று கொண்ட தொழிலதிபர் பம்மல் பி.ஆர்.எஸ்.சரவணராஜ் அவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.அதனைத் தொடர்ந்து கிரீன் சிட்டி அரிமா சங்கத் தலைவர் தொழிலதிபர் பம்மல் பி.ஆர்.எஸ் சரவணராஜ் அவர்களுக்கு கவிதை சாரல் கவிஞர்களின் அமைப்பின் நிறுவனர் ஆசிரியர் அசோகன் பொன்னாடை அணிவித்து பாராட்டி, கேடயம் வழங்கினார்.மேலும் கிரீன் சிட்டி அரிமா சங்க செயலாளராக பதவி ஏற்று கொண்ட அண்ணாமலை, பொருளாளர் ஐநா கண்ணன் ஆகியோருக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னதாக கிரீன் சிட்டி அரிமா சங்கம் சார்பில் கண்டோன்மென்ட் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.பாராட்டு விழாவில் கவிதை சாரல் கவிஞர்களுக்கு கிரீன் சிட்டி அரிமா சங்கம் சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இதில் சென்னை கிரீன் சிட்டி அரிமா சங்கம் சார்பில் ஐ.ஏ.எஸ் படிக்கும் மாணவருக்கு கல்வி தொகையாக ரூ.10000-க்கான காசோலையை கிரீன் சிட்டி அரிமா சங்கத் தலைவர் லயன்.பம்மல் பி.ஆர்.எஸ் சரவணராஜ் வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள் செல்லப்பா, ரவிசங்கரன் மற்றும் கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், அரிமா சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.