ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதுப்பாளையம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் 14ஆம் ஆண்டு ஆடிப்பூர விழா மற்றும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. பூஜையில் கஞ்சிவாார்த்தல், பாலபிஷேகம், அன்னதானம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை போன்ற பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக கஞ்சி ஊர்வலமானது மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தில் துவங்கி அமலாபள்ளி வழியாக சென்று சரவணா தியேட்டர் வழியே கோயிலை வந்து அடைந்தது. பின்னர் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியை கோபி நகர மன்ற தலைவர் என். ஆர்.நாகராஜ் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 10வது வார்டு திமுக செயலாளர் செந்தில்குமார், லாரி இளங்கோ,ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.கனகராஜ்,கோபி வட்டத் தலைவர் முத்துசாமி, கோபி சக்தி பீடம்தலைவர் எம்.நடேசன்,மாவட்ட இணை செயலாளர் இளைஞர் ஜி.எம்.அனிருத், கூகலூர் மன்றத் தலைவர் கே.பார்த்தீபன் உட்பட கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.