கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ராமநாதபுரம் கலெக்டர் ஆட்சியரக நுழைவு வாயில் முன் அதிமுக மாவட்ட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர் எம்.பி ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.அமமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.தொகுதி செயலாளர் நவநாதன், மூக்கையா, ராமகிருஷ்ணன், முத்துப்பாண்டி, மாவட்ட துணை செயலாளர் கற்பகம் பழனிச்சாமி, இணைச்செயலாளர் சித்ரா, பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஒன்றிய செயலாளர்கள் நந்திவர்மன் (ஆர்எஸ் மங்கலம்), முத்து முருகன் ( ராமநாதபுரம் தெற்கு), கோட்டை சாமி ( கிழக்கு) உடைய தேவன் ( திருப்புல்லாணி), சீனிமாரி ( மண்டபம் கிழக்கு), சிவக்குமார் ( மண்டபம் மத்தி), அழகர்சாமி ( மண்டபம் மேற்கு) ராமநாதபுரம் நகர் செயலாளர் பால சுப்பிரமணியன்,மாவட்ட, எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திசைநாதன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராமநாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர்,விவசாய அணி செயலாளர் மாரிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சோலை முருகன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சக்தி, மகளிரணி செயலாளர் சபீனா பேகம், சிறுபான்மை பிரிவு செயலாளர் முஹமது அஸ்லாம், இளைஞரணி செயலாளர் சின்னாண்டு தேவன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.