திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பிரவீன் குமார். வயது (11.) இவனது பெற்றோர்கள் பொதட்டூர்பேட்டை அருகே உள்ள பாண்டறவேடு கிராமத்தில் இயங்கும் புனித இதய மேல்நிலைப் பள்ளியில் படிக்க சேர்த்திருக்கிறார்கள். மேலும் அங்கேயே விடுதியில் தங்கி 6 ம் வகுப்பு படித்து வந்த நிலையில் சனி ஞாயிறு விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்த மாணவனை அவனது அம்மா மீண்டும் பள்ளி விடுதிக்கு அழைத்துச் சென்று விட்டு வந்துள்ளார். ஆனால் மாணவன் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் திரும்பவும் வீட்டுக்கு திரும்பி விட்டான். இந்நிலையில் தனது வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டான். இதைக்கண்ட இவனது தந்தை உடனடியாக இவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். தொடர்ந்து மேல்சிகிச்சிக்காக திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் . சிகிச்சை பலனின்றி மாணவன் பிரவீன் குமார் மரணம் அடைந்தார். தாய் தந்தையை விட்டு பிரிய மனமில்லாமல் விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லாத நிலையில் பெற்றோர்கள் தன்னை விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாலும் மனம் உடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது விஷயமாக திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.