.
கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு தமிழக அரசின் கால்நடை சிறப்பு முகாம் திருவாலங்காடு ஒன்றியம் தும்பிகுளம் கிராமத்தில் நடைபெற்றது. மண்டல இணை இயக்குனர் டாக்டர் செய்த்தூன் தலைமையில் நடைபெற்ற முகாமில் கால்நடை பராமரிப்பு துறை திருத்தணி கோட்ட உதவி இயக்குனர் டாக்டர்.ச. தாமோதரன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா கோபி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து அங்கு அடையாளப்படுத்தி இருந்த கால்நடைகளின் வளர்ச்சி. பராமரிப்பு உள்ளிட்ட வைகளை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பால்வளத்துறை பொது மேலாளர் ஜி. ரமேஷ் குமார். துணைப் பதிவாளர் சித்ரா. பால்வளத்துறை துணை பொது மேலாளர் டாக்டர் பி. சொர்ண குமார். மற்றும் திருவாலங்காடு திமுக ஒன்றிய செயலாளர் கூளூர்எம். ராஜேந்திரன் மாவட்ட கவுன்சிலர் விஜயகுமார் சரவணன். ஒன்றிய கவுன்சிலர் மோகன். மற்றும் அர்ஜுனன். கமலநாதன். பூனிமாங்காடு வெங்கடாசலம் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். இறுதியில் பூனி மாங்காடு மருந்தகம். கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பெமினா பானு நன்றி உரையாற்றினார்.