ஓசூர் எழில் நகர் எல் ஐ ஜி குடியிருப்பு பகுதியில் மேல் தளத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் தனியார் கம்பெனி ஊழியர் கதிரேசன் (50) இவரது மனைவி சம்சாத், இன்று வழக்கம்போல கதிரேசன் வேலைக்கு சென்று விட அவரது மனைவி அருகில் உள்ள உறவினர் ஒருவரை பார்க்க சென்றுள்ளார்.அப்போது மின் கசிவால் அவர்களது வீட்டில் உள்ள பொருட்கள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதுகுறித்துகதிரேசனுக்கும், ஓசூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த டிவி, பிரிட்ஜ், சுய உதவிக் குழுவில் வாங்கி வைத்திருந்த 68,000 ரொக்க பணம். துணிமணிகள் மற்றும் வீட்டிலிருந்த ஏராளமான பொருள்கள் தீயில் எரிந்து கருகி சேதமானது.வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் சேதமானதால் வாழ்வாதாரம் இன்றி தவித்த அந்த குடும்பத்தினருக்கு, ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்கிற சங்கர்,அதிமுக பகுதி செயலாளர் பி ஆர் வாசுதேவன், ராஜு அசோகா ரெட்டி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர். இந்த தீ விபத்து குறித்து ஓசூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நிகழ்ச்சியில் வட்டக் கழக செயலாளர்கள் ஹேமகுமார் ரகுமான் , பாபு,மதுராஜ்,தனபால்,அலகப்பன்,மஞ்சு,சீனிவாசன்,விஜய்,ரவி குமார்,மாதையன்,மனோஜ்,கார்த்திக்,ரமேஷ்.