புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சார்பாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆளும் திமுக அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வரவேற்புரை அம்பேத்கர் கலை நகர செயலாளர் வரவேற்புரை வழங்கினார் தலைமை C.Kமூர்த்தி மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கண்டன உரையில் OE ஷங்கர் மாவட்ட தலைவர் உரையாற்றுகையில் மணிப்பூர் மாநிலத்தில் என்னதான் நடக்கிறது.இதுவெறும் இனஇடஓதுக்கீடு பிரச்சினை தானா இதன் உள்நோக்கம் என்ன அரசாங்கம் ஏன் இதனை கண்டுகொள்ளாமல் கலவரகாரர்களுக்கு துணைப்போகிறது.பாரதபிரதமர்மோடி ஏன்இதுவரைமௌனம் சாதிக்கிறார் என்பதும்குறித்தும் ஆட்சியாளார்களை கடுமையாக சாடியும் விமர்சித்தார். மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாரத பிரதமர் நேரடியாக சென்று பார்க்க வேண்டும் என்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் மற்றும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மணிப்பூர் அமைதி பூங்காவாக திகழ மத்திய அரசு நடவடிக்கை எடுத்த வேண்டும் என்றும் மற்றும் திமுக அரசு விலைவாசி உயர்வு தேர்தலில் வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் இருப்பது விவசாயிகளை விளை நிலங்களை அழிப்பது என பல்வேறு விதங்களில் திமுக அரசு விவசாயிகளுக்கு இன்னல்களை குடுத்து வருகிறது அது மட்டும் இல்லாமல் அடித்தட்டு மக்களுக்கு எந்தவித திட்டங்களும் செயல்படுத்துவதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கண்டன உரையாற்றினார் புரட்சி பாரதம் கட்சி மத்திய அரசு கூட்டணியில்இருந்தாலும் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் எங்கள் தலைவர் ஜெகன் மூர்த்தியார் என்றும் தவறுவதில்லை என்றும் எந்த தவறையும் தைரியமாக சுட்டிக் காட்டும் தலைவர் ஜெகன் மூர்த்தியார் என்றும் கண்டன உரையில் கூறினார் மேலும் கண்டன உரையில் செங்கல்பட்டு எகே. சோமசுந்தரம் மாநிலவழக்கறிஞர் பிரிவு தலைவர் மற்றும் சட்டம் முனீஸ்வரன் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பிரிவு மற்றும் அதே சேகர் சென்னை மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாபு மாவட்டத் துணைத் தலைவர் செங்கை மதன் மாவட்ட இணை செயலாளர் அம்பேத்கர் துரை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரிவு ஆகியோர் கண்டன ஊரையாற்றினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர கிளை மகளிர் அணி அனைவரும் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர் இறுதியாக நன்றியுரை அம்பேத்கார் துரை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரிவு அவர்கள் வழங்கினார்