சேலம் முன்னாள் அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் கடந்த 2012ம் ஆண்டு
சேலம் மத்திய குற்றப்பிரிவு
போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கண்டனம் தெரிவித்து, ஜெயலலிதா போல
வேடம் அணிந்து கொண்டு கிண்டல் செய்ததாகவும், பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், கொடுத்தபுகாரின்பேரில் 4 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த டவுன் போலீசார் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.இதில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின்நேர்முக உதவியாளர் சேகர், அருள்மணி, சம்பத்,(கேசவன், கார்த்தி(எ) செந்தூர்கார்த்தி, திருநாவுக்கரசு,தனபால், ஜிலானிபாஷா, ராஜா, லோகு (எ)லோகநாதன், ‘ராஜேந்திரன், சேகர், மூர்த்தி, ராஜேந்திரன்,மணிகண்டன், பரமசிவம, விஜயசுரேஷ், நல்லதம்பி,சிவராஜ், கந்தசாமி ஆகியோர் கைது செய்ப்பட்டனர்.இந்த வழக்கு, சேலம் 1 வது நீதித்துறை நடுவர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடந்தபோதே சிவராஜ், கந்தசாமி ஆகியோர் உயிரிழந்தனர். வழக்கறிஞர்கள் இனியன் செந்தில்,மயில்கண்ணன் ஆகியோர்ஆஜராகி வாதம் செய்தனர்.இந்தவழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மதிவாணன், 19 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.