ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்தும் வகையில். திருத்தணி நகர மன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. பள்ளி முன்னேற்றம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு துணை நிற்க குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி பள்ளி மேலாண்மை குழு வானது உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அவர்களின் பொறுப்பும். மேலும் இவர்கள் பங்களிப்பும் குறித்த புரிதலை உருவாக்கி பள்ளி மேலாண்மை குழுவினை வலுப்படுத்தும்நோக்கில்  இந்த பயிற்சி கூட்டம் நடைபெற்றது.  திருத்தணி நகராட்சி கூட்ட அரங்கத்தில்  நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவர் ஆ சாமிராஜ் அனைவரையும் வரவேற்றார். பயிற்சி ஆசிரியர் பயிற்றுநர் விஜயகுமார் துவக்கி வைத்து. விளக்க உரையாற்றினார்.. இதில் கருத்தாளர்கள் நரசிம்மன். நந்தினி. ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுனர் தண்டாயுதபாணி நன்றி கூறினார். . இதில் அனைத்து  கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.