பிரீமியர் லீக் அளவிலான கராத்தே போட்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வைத்து நடைபெற்றது.  இதில்  தமிழகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ-  இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர்  ரென்ஷி.   சுரேஷ்குமார் செயல்பட்டார். இதில்   தூத்துக்குடி மாவட்ட கராத்தே  செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் விளாத்திகுளம் தொகுதி குளத்தூரை சேர்ந்த  மாணவர்கள் பங்கேற்று கட்டா  பிரிவில் ரிஷி சவித் தங்கப் பதக்கத்தையும்,  ஸ்ரீ கிஷோர், கமலேஷ், நலன் வெள்ளிப் பதக்கத்தையும் மேலும் 10 மாணவர்கள் வெண்கல பதக்கத்தையும்  சண்டை பிரிவில் ஶ்ரீ கிஷோர் தங்கப்பதக்கத்தையும் குகன் அய்யனார் வெள்ளி பதக்கத்தையும் வென்று ஊருக்கும் மாவட்டத்திற்கும்  பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.