;

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது X440 மாடலின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. புதிய விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. என்ட்ரி லெவல் மாடலான X440 விலை தற்போது ரூ. 2 லட்சத்து 29 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் என்று அதிகரித்துள்ளது. இதன் டாப் என்ட் மாடல்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம், ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் என்று மாறி இருக்கிறது.
விவிட் என்று அழைக்கப்படும் மிட்-ரேன்ஜ் மாடலின் முந்தைய விலை ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் என்று மாறி இருக்கிறது. இதன் S வெர்ஷன் விலை முன்னதாக ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
ஹார்லி டேவிட்சன் X440 மாடலின் அனைத்து வெர்ஷன்களிலும் 440சிசி, சிங்கில் சிலின்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27 ஹெச்பி பவர், 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. டெனிம் என்று அழைக்கப்படும் X440 மாடலின் பேஸ் வேரியன்டில் வயர்-ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. விவிட் வேரியன்டில் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. S வெர்ஷனில் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் பிரீமியம் கனெக்டிவிட்டி மாட்யுல் மற்றும் இ-சிம் வசதி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் X440 மாடல்- ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் டிரையம்ப் ஸ்பீடு 400 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.