அரியலூர்மாவட்ட செந்துறை அடுத்த  ஆதனகுறிச்சி கிராமத்தைச்சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று வீட்டின் பக்கத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில்  விழுந்து  பசுமாடு கத்தும் சத்தம் கேட்டு பக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பசு மாட்டின் உரிமையாளரிடம்  தகவல் கொடுத்தனர் உடனடியாக கிணற்று பகுதிக்கு வந்த அவர் உடனடியாக செந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.விரைந்து வந்த செந்துறை தீயணைப்பு நிலைய பணியாளர்கள் நிலையா அலுவலர் ஆர். பூபதி  தலைமையில் முருகராஜ் காமராஜ் தயாநிதி சதீஸ் ஆகியோர் மீட்டு  பணியில்  ஈடுபட்டனர்.பின்னர் பசு மாட்டை மேலே கொண்டு வந்த தீயணைப்பு வீரா்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.