தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு இடங்களில் செங்கோட்டை ஒன்றிய தலைமை தொண்டரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குழந்தைகளுக்காக தளபதி விஜய் பயிலகம் திறக்கப்பட்டது.
இதில் ஒன்று முதல் 12 வகுப்புகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மாலை ஆறு மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்கள் நடக்கும் இந்த சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக இம் முகாமில் 60 மாணவ மாணவியர் பங்கேற்றனர்
நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி தலைவர் நியாஸ், செங்கோட்டை ஒன்றிய தொண்டரணி நிர்வாகிகள் சக்தி, முத்துமணி, மாதவன், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.