கன்னியாகுமரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி சிற்றார் மலையோர பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடி மனிதர்களை தாக்கி அச்சத்தை ஏற்படுத்திய புலி 37-நாட்களுக்கு பிறகு 7-கிலோமீட்டர் தொலைவில் பத்துகாணியில் சிக்கியது மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை சிறப்புபடையினர் 

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியான சிற்றார் பகுதியில் கடந்த மாதம் 3-ஆம் தேதிமுதல் புலி நடமாட்டம் இருந்துவந்தநிலையில் அப்பகுதியில் வீட்டில் வளர்த்த கால்நடைகளை கடித்து கொன்ற புலி தடுக்கவந்தவரையும் தாக்கி காட்டுக்குள் மறைந்தது. அதைதொடர்ந்து அருகிலுள்ள மலையோரபகுதியான முடவன்பொற்றை பகுதியிலும் கால்நடைகளை வேட்டையாடிய நிலையில் புலியை பிடிக்க கண்காணிப்பு கேமிராக்கள், சிறப்பு கூண்டுகள் அமைக்கபட்டும் வனத்துறை சிறப்பு எலைட் படையினரும் மோப்பநாய் உதவியுடன் புலியை தேடிவந்தநிலையில் புலி தென்படாததால் தேடுதல் பணியை நிறுத்தியிருந்தனர்.  இந்நிலையில் சிற்றாரிலிருந்து 7-கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆறுகாணி அருகே ஒருநூறான்வயல் பகுதிக்கு சென்ற புலி அப்பகுதியில் வீடுகளில் வளர்க்கபட்ட 4-ஆடுகளை கடித்து கொன்றது இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் மீண்டும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டநிலையில் பத்துகாணி அருகே மலையோர பகுதிரயில் புலி தென்பட்டதையடுத்து வனத்துறை சிறப்புபடையினர் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் அதையடுத்து சிறப்பு கூண்டுக்குள் எடுத்து வந்த புலியை அங்கிருந்து வாகனம் மூலம் பேச்சிப்பாறை சீரோ பாயின்ட்டுக்கு எடுத்துவரபட்டு சிகிட்சையளிக்கபட்டது பிடிபட்ட புலியை வண்டலூர் பூங்காவிற்கு கொண்டுசெல்வதாக வனத்துறையினர் அறிவித்தனர் கடந்த 37-நாட்களாக மலைவாழ்மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வனத்துறையினருக்கு போக்குகாட்டிய புலியை வனத்துறையினர் பிடித்ததையடுத்து மலைவாழ்மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.