சேலம் மாநகர காவல் துறை சார்பாக போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் சேலம் மாநகர காவல் ஆணையாளர் பா .விஜயகுமாரி  தலைமையில் சோனா கல்லூரி வள்ளியப்பா கலையரங்கில் நடைபெற்றது .மேற்படி கூட்டத்தில் சேலம் மாநகர துணை ஆணையாளர்( வடக்கு )கௌதம் கோயல் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் .வள்ளியப்பா, துணைத்தலைவர் தியாக வள்ளியப்பா, தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர். கார்த்திகேயன் சோனா தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் செந்தில்குமார், சோனா கலைக்கல்லூரி முதல்வர் காதர் நிவாஸ் ,மற்றும் சேலம் மாநகர காவல் துறையினர் ஆகியோர்கள் உட்பட சுமார் 1300 கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் மேற்படி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் மேலும் e—pledge மூலம் http://enforcementbureautn. Org/pledge என்ற இணையதளம் மூலம் உறுதிமொழி எடுத்து சான்று பெறுவது தொடர்பாக மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டி மற்றும் இதர போட்டிகளில் பங்குபெற்று தேர்வானவர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர்  பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் .சேலம் மாநகர காவல் ஆணையாளர் கல்லூரி மாணவர்களிடையே பேசும்போது போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக மாணவர்கள் உறுதுணையாக இருந்து சமுதாயத்தில் போதை பொருட்களை அறவே ஒலிக்க வேண்டும் என்றும் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். விழிப்புணர்வு பிரச்சாரத்தில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கல்லூரி மாணவர்கள் நாடகம் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தினர்.