தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் உள்ள இசக்கி மஹாலில் வைத்து கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி மூன்று தினங்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சி ஆகஸ்ட்  மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி துவக்க விழா  காலை 10 மணி அளவில் நடைபெற்றது. துவக்க விழாவில் எம்.எல்.ஏ-க்கள் பழனி நாடார், ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து வைத்தனர் இதனைத் தொடர்ந்து தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் கண்காட்சி உள் அரங்கை திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது தென்காசி மாவட்ட கட்டுமான பொறியாளர்கள் சங்க தலைவர் முத்துகுமார் வரவேற்புரை ஆற்றினார் .சங்க பொருளாளர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் மாரிமுத்து தலைமை உரையாற்றினார். எம்எல்ஏக்கள் பழனி நாடார், ராஜா மற்றும் தென்காசி நகர் மன்ற தலைவர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். அதனைத் தொடர்ந்து முன்னாள் தலைவர்கள் தில்லை நடராஜன், காதர் பாஷா , முத்துமாரியப்பன், துணைத் தலைவர்கள் பாலசுப்ரமணியன் சண்முக செல்வன் கலந்து கொண்டனர். விழாவின்போது தென்காசி நகர் மன்ற தலைவர் சார்பில் மரக்கன்றுகளை நகர மன்ற துணைத்தலைவர் கே என் எல். சுப்பையாவிடம் வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் உதயகிருஷ்ணன், தமிழக கட்டிட பொறியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜேஷ் தமிழரசன், மாநில துணைத்தலைவர் விஜயபானு, முன்னாள் மாநில தலைவர் ராகவன், மண்டல செயலாளர் இசக்கியப்பன், மண்டல இணைப் பொருளாளர் ஜோசப், வாசுதேவநல்லூர் தங்கப்பழம் குழு நிறுவனர் தங்கப்பழம், ரோட்டரி மாவட்ட தலைவர் கே ஆர் பில்டர்ஸ் கே.ராஜகோபாலன், சுப்புலட்சுமி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனர் கண்ணன், சக்தி டைல்ஸ் மனோஜ், எபனேசர் டைல்ஸ் எபி மேத்யூ, கட்டிட பொறியாளர்கள் சங்க செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

கட்டுமான பொருட்கள் கண்காட்சியில் 60க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது இதில் புதிய வீடு கட்டுவதற்கு தேவையான மின்சாதன பொருட்கள், ஹார்டுவேர், இன்டீரியர் டெக்கரேஷன், பல வண்ணங்களில் ஆன மேற்கூரைகள், பெயிண்ட் கம்பெனிகளின் அரங்குகள், டைல்ஸ் கம்பெனிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நாளில் ஆய்க்குடி ஜே பி பொறியியல் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்து கண்காட்சி அரங்கை பார்வையிட்டனர் மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கண்காட்சியை பார்ப்பதற்காக குவிந்தனர் இந்த கண்காட்சி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.