மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள செய்தியாளர் அரங்கில் ஓபிஎஸ் அணி அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஓபிஎஸ் அணி தெற்கு மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான ஐயப்பன்,மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் வடக்கு மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் சிவா செல்லம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் செல்லம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் பிரபு மாநகர் மாவட்ட கிளை செயலாளர் வி கே எஸ் மாரிசாமி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் புதூர் சுந்தர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மேலமடை சரவணன் வடக்கு ஒன்றாம் பகுதி கழக செயலாளர் முனியசாமி 14 வது வட்ட கழக செயலாளர் இளங்கோவன் பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ் அவனியாபுரம் பகுதி செயலாளர் கருப்பையா கண்ணன் மகாலிங்கம் உட்பட பலர் இருந்தனர்.இச்செய்தியாளர் சந்திப்பில் தொடந்து பேசிய மருது அழகுராஜா,கொடநாட்டில் கொலை கொள்ளை விகாரம் புது கட்டத்தை எட்டியுள்ளது..கனகராஜ் சகோதரர் தனபால் எடப்பாடிக்கு இதற்கு சம்பந்தம் உள்ளது என ஊடகத்தில் தெரிவித்தார்..தனபால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என புதிய தகவலை தெரிவித்துள்ளார்..தனபால் ஆவணங்களை சேலத்திலும் ஆத்தூரிலும் உள்ளதாக தெரிவித்துள்ளார்..அன்றைக்கு உள்ள அதிமுக கீழுள்ள காவல் துறையினரும் அடித்தனர் தற்போதைய திமுக அரசு ஆட்சி காலத்திலும் காவல்துறையினர் அடிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.தனபால் கூறியதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும்..திமுக அரசு வாக்குறுதியாக கொடைநாடு கொலை வழக்கு 90 நாட்களில் கைது செய்வதாக கூறியுள்ளனர்.என்னுடைய சகோதரர் என்னிடம் சொன்னார். எடப்பாடி பழனிச்சாமி தான் என்று..என்னிடம் நிறைய தகவல்கள் உள்ளது ஆனால் சொல்ல பயமாக உள்ளது..கொடநாடு கொலை நடந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.. திமுகவின் B டீம் எடப்பாடி பழனிச்சாமி தான்..கொடநாடு கொலை வழக்கில் மத்திய அரசும், மாநில அரசும் அதிமுக பிளவுபட்டு இருந்தால் தான் நாம் முன்னேற முடியும் என நினைக்கிறது..சென்னையில் பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டிலை வீசினார்கள் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் ஏன் ஓபிஎஸ்ஐ பற்றி பேசவில்லை.. பயமா..?தனபாலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் மக்களே பாதுகாப்பு கேடயமாக மாறுவார்கள் என்றார்.