தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் பாத்தியப்பட்ட இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது அதனை முறையாக விசாரணை செய்திட இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது

ஏழைகளின் இன்ப சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு  லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் அவர்கள் திருக்குற்றாலநாதர் திருக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர் பல்வேறு புகழுக்கு சொந்தமான இந்த திருக்கோயிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கோயில் நிர்வாக அதிகாரி கண்ணதாசன் என்பவரே முதல் காரணமாக இருந்து வந்துள்ளார் கடைகள் ஏலம் விடுவதில் நடந்த முறைகேடுகள், கோவில் சட்ட திட்ட விதிமுறைகளை எதையும் பின்பற்றவில்லை, சிப்ஸ் கடைகள், டீக்கடைகள், ஜவுளி கடைகள் என அருகருகே அமைக்க அனுமதி கொடுத்ததன் விளைவு அதுமட்டுமின்றி அமைக்கப்பட்ட கடைகளை ஆய்வு செய்யாமல் இருந்தது இவ்வாறு தனக்கான பணிகள் எதையும் சரிவர செய்யாமல் இருந்தது ஒரே நபர் பெயரில் பல கடைகள் கொடுத்தது மாற்று மதத்தை சார்ந்தவர்களுக்கு அதிக லாபத்துடன் கடைகளை வாடகைக்கு விட்டது கோயிலில் பெருமை தெரியாத மாற்று மதத்தினர் தெற்கு வாசல் பகுதியில் மாமிச இறைச்சி சமைத்து சாப்பிடுவது என்று கோயில் விதிகளுக்கு எதிராகவே நிறைய குளறுபடிகள் நடைபெற்றுள்ளது இதற்கு முழு காரணமான நிர்வாக செயல் அலுவலர் கண்ணதாசன் இணை ஆணையர் அன்புமணி ஆகியோர் மீது சட்ட நடவடிக்கையும் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் உள்வாடகைக்கு விட்ட நபர்கள் மீதும் விசாரணை மேற்கொண்டு கோயிலை சுற்றி 200 மீட்டர் தொலைவில் தான் கடைகளை அமைத்துக் கொள்ள தமிழக அரசும் இந்து சமய அறநிலைத்துறை அனுமதி வழங்க வேண்டும் இதுபோன்ற சம்பவங்கள் குற்றாலம் மட்டுமல்லாமல் இனி எந்த கோயிலிலும் நடைபெறாத வண்ணம் இதன் நடவடிக்கை அமைய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சனிடம் மனுவின் நகலினை அளித்துள்ளனர்.