தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பான்குளம் ஊராட்சி மைலப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பையா. இவர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்க வந்திருந்தார் அப்பொழுது நான் கடந்த 24/7/2023ல் தங்களிடம் நில அளவையர் எனது நிலத்தை அளக்காமல் இருந்த காரணத்தினால் தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோரை பாராட்டி டிஜிட்டல் பேனர் வைக்க அனுமதி கேட்டு இருந்தேன் எனவும் எனக்கு அனுமதி தராத காரணத்தினால் கடந்த 14/ 8/ 2023 ல் தங்களது அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினேன் அதன் பின்பு தென்காசி வட்ட தலைமை அளவையர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் நான் அவர்களிடத்தில் தவறு செய்யும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன் எனவும் அதன் பின்பு கடந்த 21ஆம் தேதி தென்காசி தலைமை அலுவலர் மற்றும் வடக்கு பாப்பான்குளம் கிராமத்தில் தற்போது நில அளவையராக பணி செய்பவர், வடக்கு பாப்பான்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் நான் அவர்களிடம் நேரில் ஆஜராகி நிலம் அளப்பதற்கு பணம் செலுத்தி ஒரு வருடம் காலதாமதம் செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன் என்றும் தென்காசி வட்டம் வடக்கு பாப்பான்குளம் கிராமம் சர்வே எண் 38 /2 A 2 மற்றும் 38/2 B 1 ஆகிய நஞ்சை நிலம் பட்டா எண் 1850 இல் கூட்டு பட்டாவில் எனது பெயர் இருந்தது மேற்படி இடத்தை எனது பெயரில் தனிப்பட்டாவிற்கு கடந்த 05/05/ 2023 பணம் செலுத்தி ஆவணம் தாக்கல் செய்து மனு செய்திருந்தேன் எனவும் தற்பொழுது 16/8/2018 மேற்படி நஞ்சை சர்வே எண் 38/2A2 மற்றும் 38/2B1 ஆகிய நிலங்கள் கிராம நத்தம் பகுதியை சார்ந்தது என தென்காசி வட்டாட்சியர் தள்ளுபடி செய்திருக்கின்றார் எனவும் மேற்படி நிலத்தை ஆய்வு செய்யாமலும் நஞ்சை நிலத்தை கிராம நத்தம் என குறிப்பிட்டுள்ள தென்காசி வட்டாட்சியர் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என தங்களிடம் நீதி வேண்டி இந்த மனுவை வழங்குவதாக தெரிவித்து இருந்தார். தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்க வந்த விவசாயி சுப்பையா நீதி வேண்டும் என்ற வாசகத்துடன் கூடிய அட்டையை கழுத்தில் தொங்க விட்டவாறு வந்திருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.