செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையின் திருமணி செல்லும் சாலையில் உள்ள நுழைவு வாயிலில் அருகே தற்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சூழல் அமைந்துள்ள இடத்திற்கு எதிரில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பமும் ஆட்டோ ஓட்டுனர் சங்க பெயர் பலகையும் வைக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல இடையூறாக உள்ளதாக தெரிவித்ததன் அடிப்படையில் அங்கிருந்த கொடிக்கம்பத்தையும் சங்கப் பெயர் பலகையும் எடுத்து காவல் துறையிடம் அனுமதி பெற்று மாற்று இடமான என்.ஜி.ஜி.ஓ நகரில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாதவாறு அதே கொடிக்கம்பம் மற்றும் சங்க பெயர் பலகை ஏற்றுவதற்காக காவல் துறையினரின் அனுமதி பெற்று தயார் செய்யப்பட்டது. இந்நிலையில் 27-8-2023 அன்று என்.ஜி.ஜி.ஓ நகர் பகுதியில் தயார் செய்யப்பட்ட கொடிக்கம்பத்தை செங்கல்பட்டு வட்டாட்சியர் எவ்வித முன்னறிவிப்பு இன்றி அகற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் சக்ரபாணி தலைமையில் பாட்டாளி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தைச் சேர்ந்தார்கள் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் மனு மீது விசாரணை நடத்திட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு அறிவுருத்தினார்.பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு நகர நிர்வாகிகள் சத்யா,சரவணன்,பாலாஜி ராமலிங்கம்,ஏழுமலை,வெங்கடேசன், டில்லி,சிவா,தேவா ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.