தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்டம் சார்பாக தேனீ கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கை மனுவில் தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காற்றாடி மண் செம்மண் குவாரிகள் நடத்துவதற்கு குறிப்பிட்ட உரிமையாளர்களுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் ,இந்த குவாரிகலிருந்து அரசு வழங்கப்பட்ட அளவைவிட அதிகமாக மண் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் ‘ஒரு நடைசீட்டை வைத்து பலமுறை அனுமதியின்றி கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது என்றும் இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் ,மேற்படி குவாரி உரிமையாளிடமிருந்து சட்ட விரோதமாக புதுக்கோட்டையை சேர்ந்த கம்பெனி என்ற பெயரில்  முறைகேடாக நாளொன்றுக்கு பல லட்சம் வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது என்றும்.  தேனி மாவட்டத்தில் உள்ள இயற்கை மற்றும் கனிம வளங்கள் சீரழிக்கப்பட்டு வருகிறது என்றும் இதன் சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 6-7- 2023 அன்று மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மேலும் தேனி மாவட்டத்தில் கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை மனுவினை வழங்கினார்கள் இந்த நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா மற்றும் தமிழக முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்