திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கே.புதுக்கோட்டைஊராட்சியில்5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்து பேசியதாவதுதேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்திருந்தோம்  100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் சேர்த்து 150 நாட்கள் வேலை ஊதியம் 300 வழங்கப்படும் என்று கூறி இருந்தோம் தற்பொழுது 294 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது மேலும் 150 நாட்கள் பணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்மகளிருக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மாதம் ஆயிரம் வழங்கப்படும்,அரசு ஊழியர்கள் பெரும் செல்வந்தர்கள் வருமான வரி செலுத்துபவர்கள் நீங்களாக,மற்ற அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் தாய்மார்கள் வீண் புரளிகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்மேலும் ஊருக்கு பத்து பேருக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் புரளியை கிளப்பி விடுபவர்கள் சிறைக்குச் சென்று விடுவார்கள் என்று கூறினார்இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மொ.நா.பூங்கொடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவ குருசாமி,முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன்,கிருஷ்ணன்,மேற்கு வட்டாட்சியர் செழியன்,வருவாய் ஆய்வாளர் பூங்கோதை,வடக்கு ஒன்றிய செயலாளர் மணி மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி சண்முகவேல்,ஒன்றிய கவுன்சிலர் நாகலெட்சுமி ரமேஷ்,ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சியப்பன்,துணைத் தலைவர் வெங்கடாசலபதி,மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் பெரும் திரளானோர்கள் கலந்து கொண்டனர்