திருத்தணியில் புதிதாக கட்டப்பட்ட வரும் பேருந்து நிலையத்தை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருத்தணியில் தற்போது உள்ள பேருந்து நிலையம் பயணியர் வசதிக்காக போதுமானதாக இல்லை என்பதாலும். அதிக அளவில்.வந்து செல்லும் பேருந்துகள் நிற்பதற்கும். பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்கவும் இந்த பேருந்து நிலையம் நெரிசலாக இருப்பதாகவும் இந்த பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள சன்னதி சாலை. அரக்கோணம் ரோடு. ம.பொ.சி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் செல்லுவோர் மிகவும் சிரமப்படுவதாகவும் புதியதாக விரிவடைந்த நிலையில் நவீனமாக ஒரு பேருந்து நிலைய அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததின் அடிப்படையில். ரூ. 12 கோடியே 74 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருத்தணி அரக்கோணம் சாலையில் தற்போது புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பயணிகள் தங்குவதற்கு உண்டான இடம். இருசக்கர வாகனங்கள் நிற்பதற்கும் .அதிக அளவிலே பேருந்துகள் நெருக்கடி இல்லாமல் வந்து செல்வதற்கும். குடிநீர். நவீன கழிப்பறை வசதிகள். உள்ளிட்ட அனைத்து அம்சங்களோடு விசாலமான முறையில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ். இந்த புதிய பேருந்து நிலைய கட்டிட பணிகளை பார்வையிட்டு வரைபடத்தை ஆய்வு செய்து. விரைவில் பணியை முடித்து பயன்பாட்டுக் கொண்டு வரவேண்டும் என நகராட்சி அதிகாரிகள் மற்றும். ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர்.ந.அருள் நகராட்சி துணைத் தலைவர் ஆ. சாமிராஜ் நகராட்சி பொறியாளர் ராஜ விஜய காமராஜ். கவுன்சிலர்கள் விஜய சத்யா ரமேஷ். வெங்கடேசன். சண்முகவள்ளி ஆறுமுகம்.நாகராஜ் மேஸ்திரி. குமுதா கணேசன். எம்..லோகநாதன் ஜி. அப்துல்லா. கே பிரசாத். ரேவதி சுரேஷ் மகேஸ்வரி கமலக்கண்ணன். மற்றும் ஒப்பந்ததாரர் தாமோதரன். அதிகாரிகள் உடன் இருந்தனர்.