அரியலூர் மாவட்ட அலுவலகத்தில் மதுரை மாநகரில் நடைபெறும் செப்டம்பர் 15-ல் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாள் மாநில மாநாடு குறித்து சௌ. சகாதேவன் மாவட்ட அவைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் அரியலூர் நகரச் செயலாளர் இராம. மனோகரன் வரவேற்றார் கூட்டத்திற்கு அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பா மாநில விவசாய அணி செயலாளர் வாரணவாசி கி. இராஜேந்திரன் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பெ. தங்கவேல் மாவட்ட பொருளாளர் வீர. புகழேந்தி தலைமை செயற்குழு உறுப்பினர் சி. இளவரசன் மாவட்டத் துணைச் செயலாளர் செ. கலிஸ்துராஜ் முன்னிலை வகித்தனர் அரியலூர் மாவட்ட செயலாளர் க. ராமநாதன் மதுரை மாநகரில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் மாநில மாநாட்டுக்கு செல்வதற்கான தீர்மானங்களை எடுத்துரைத்தார்
தீர்மானம்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி மதுரை மாநகரில் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா மிகவும் சீரும் சிறப்புமாக தலைமை கழக ஏற்பாடு செய்துள்ளது அது சமயம் நமது மாவட்ட கழகத்தின் சார்பில் பெரும் திரளாக தொண்டர்களோடு கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது
மாநில உரிமைகளை பறித்துக் கொண்டு இருக்கின்ற ஒன்றிய மோடி தலைமையிலான அரசின் செயல்களை மாவட்ட கழகம் கண்டிக்கின்றது.
அரசியல் சட்டத்தில் நமது தாய்மொழி தமிழை ஆட்சி மொழிகளில் ஒன்றாக சேர்ப்பதற்கு உரிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று மாவட்ட கழகம் கேட்டுக்கொள்கின்றது என்று தீர்மானங்களை முன்வைத்தார் மற்றும் மாநாட்டில் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் அணி அமைப்பாளர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்
கூட்டத்தில் நிர்வாகிகள் தா.பழூர் ஒன்றிய செயலாளர் தென்கச்சி என். ராமச்சந்திரன் ஒன்றிய அவைத் தலைவர் ஏ.ஜி. சின்னதுரை தத்தனூர் வளவெட்டிகுப்பம் கிளைச் செயலாளர் ராஜா மற்றும் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
கூட்டம் முடிவில் ஒன்றிய செயலாளர் அரியலூர் வடக்கு பி. சங்கர் நன்றி உரை கூறினார்