தேனி அருகே வெங்கடசலபுரத்தில் நிவேரா கிளினிக் சார்பில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் முதுகு வலி ,கழுத்து வலி, தோல்பட்டை வலி ,குதிகால் வலி ,கனுக்கால் வழி, முழுங்கை வலி, மூட்டு வலி, பக்கவாதம், நடுக்குவாதம், முகவாதம், தசை எலும்பு நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து வகை நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது .மேலும் ரத்தப் பரிசோதனை ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு பரிசோதனைகளும் இந்த மருத்துவ முகாமில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முகாமை மருத்துவர்கள் அனுசியா பகவதி ,நிவேதா ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் இந்த மருத்துவ முகாமில் பள்ளியின் நிர்வாகி ஆனந்த் ,பள்ளியின் ஆசிரியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.