தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்  பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் திட்டத்தின் சார்பில் மகத்தான சாதனைகள் 2 ஆண்டு ஆட்சி ஓயா உழைப்பின் ஈராண்டு புகைப்படக் கண்காட்சியினையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் துறை செயல்பாடுகள் புகைப்படக் கண்காட்சி மற்றும் தலைவர்களின் ஓவியங்கள், வண்ணமிகு பறவைகள் உள்ளிட்ட காய்கறி வடிவமைப்பு கண்காட்சியினையும் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சியினையும்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதல்வரின் முகவரி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், 15 வது ஒன்றிய நிதிக்குழு பணி முன்னேற்றம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், திறன் பயிற்சி, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், வருவாய்த்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் துறை, ஆவின், உள்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டார்கள். அவர்கள் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்

ஆய்வின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்ததாவது:

இந்நிகழ்ச்சியில் 478 பயனாளிகளுக்கு ரூ.35.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அரசு கல்வி சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளிக்கும் போது அலுவலர்கள் அவற்றை வெற்று காகிதமாக பார்க்காமல் அவர்களின் வாழ்க்கையாக நினைத்து உடனடியாக பரிசீலித்து பதிலளிக்க வேண்டும். நீண்ட நாள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கல்வி கற்க செய்வதிலும் கல்வி திட்டங்கள் அனைத்தும் எல்லா மாணவ, மாணவியர்களுக்கும் சென்றடைவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, கிராம சாலைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளில் அலுவலர்கள் அதிக கவனம் செலுத்தி விரைவாக பணிகளை முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் பொது தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆய்வின் போது மக்கள் பிரதிநிதிகளும் உடன் அழைத்து செல்லப்பட வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் தென்காசி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். பணிகளில் சுணக்கம் கண்டறிப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே அனைத்து துறை அலுவலர்களும் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து அரசுக்கு நற்பெயரை பெற்று தர வேண்டும். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருங்கிணைத்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

கூட்டத்தில் சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அரசு செயலாளர் தரேஸ் அகமது, மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), 

சதன் திருமலைகுமார் (வாசுதேவநல்லுார்), மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் எஸ்.தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் உதயகிருஷ்ணன்  வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.