மதுரை அருகே வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டியில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருக்கோவிலில் கோகுலா அஷ்டமி ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ கோபாலகிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது கடந்த 29ஆம் தேதி ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் ஸ்ரீ கோபாலகிருஷ்ணனுக்கு பாலபிஷேகம் பூ அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த நிலையில் கோகுலாஷ்டமி முன்னிட்டு சிறப்பு அன்னதான நிகழ்ச்சியினை வாடிப்பட்டி அ. இ. அ. தி.மு.க நகர செயலாளர் 18 ஆவது வார்டு கவுன்சிலர் சூர்யா அசோக் குமார் அறுசுவை உணவினை பக்தர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருக்கோவில் திருப்பணி குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.