சென்னை, பல்லாவரம் அறிஞர் அண்ணா கண்டோன்மென்ட் உயர்நிலை பள்ளியில் சென்னை கீரின் சிட்டி அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்ட
சென்னை கீரின் சிட்டி அரிமா சங்க தலைவர் லயன்.பி.ஆர்.எஸ்.சரவணராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரிமா சங்க மாவட்ட ஆளுநர் லயன்.ஸ்ரீதர், பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் ஐ.நா.கண்ணன், பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் பம்மல்.ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தின விழாவில் சென்னை கிரீன் சிட்டி அரிமா சங்கம் சார்பில் பத்தாம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாடப் பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்த ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதும், பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் மற்றும் முன்னாள் ஆசிரியர் கவிஞர்.அசோக் ஆகியோருக்கு 40-ஆண்டுகால கல்வி சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவற்றை அரிமா சங்க மாவட்ட ஆளுநர் லயன்.ஸ்ரீதர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கனி தரும் மரங்களான மா, கொய்யா, நெல்லி, மாதுளை உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கி, பள்ளி வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள் செந்தில் வளவன் ரவிக்குமார், கிரீன் சிட்டி அரிமா சங்க செயலாளர் அண்ணாமலை, லயன்.ரவிசங்கரன், லயன்.ரங்கநாதன், பூக்கடை.முனுசாமி. கவிஞர்.அசோக், மற்றும் கிரீன் சிட்டி அரிமா சங்க நிர்வாகிகள், ஆசிரியர் பெருமக்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.