தென்காசியில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்தில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் .தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருவது வேதனைக்குரிய செயலாக உள்ளது எனவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கானது முதல்வர் கையில் இல்லாமல், திமுக கட்சிக்காரர்களிடையே சட்டம் ஒழுங்கு உள்ளதால் தான் இந்த நிலைமை தற்போது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் போர் தொடுக்க முயற்சி செய்கிறார் எனவும், மனித குலத்தை தாண்டி எல்லா உயிரினத்திற்கும் பொதுவானதாக சனாதன தர்மம் உள்ள குழலில், இந்து அறநிலையத்துறை அமைச்சராக உள்ள அமைச்சர் சேகர்பாபு சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றது கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் அவர் வகிக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம் ஒரு நல்ல அரசாங்கம் நேர்மையான அரசாங்கம் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அமைச்சர்களை வைத்திருப்பது அழகல்ல எனவும் இது கேலிக்குரியது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் பேசினார்.
தொடர்ந்து, பாரத் நாடு என்று இந்திய நாட்டின் பெயர் மாற்றம் ஏற்பட்டால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது எனவும், நாம் முன்பே நமது நாட்டை பாரத நாடு என்று கூறுவது வழக்கம் தான். எதிர்க்கட்சிகளில் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்ததால் தான் பாரத் நாடு என்று பெயர் மாற்றம் ஏற்பட காரணம் என நினைத்தால் நாம் முதலில் நன்றி சொல்ல வேண்டியது இந்தியா கூட்டணிக்கு தான் என்று டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்.
பேட்டியின் போது தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணபாண்டியன், மாநில பொது செயலாளர் வீகே.அய்யர், மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் வாழையூர் குணா, சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் மூர்த்தி, திருமலைச்சாமி, வழக்கறிஞர் கணேசன் கொள்கை பரப்பு செயலாளர் திருமலைகுமார்நகர செயலாளர்கள் சிவசாமி, சுமித்ரா தேவேந்திரன்.மணிசங்கரன், ஒன்றிய செயலாளர்கள்.. குமாந்தபுரம் ராஜா, குமார் ஞானத்தாஸ். எஸ் பி.சுரேஷ், வினோ தேவேந்திரன்,மேலகரம் சந்திரன்,கீழப்புலியூர் பாபு, சுரேஷ் பார்த்திபன், கண்ணன் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.