முதுகுளத்தூர் நாயக்கர் தெருவில் அமைந்துள்ள கண்ணன்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் சுப்பையா தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. கண்ணன். ராதை வேடமிட்ட சிறுவர் சிறுமிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் செல்லையா.மணி,செந்தில் கண்ணன், சிவமுருகேசன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கவுன்சிலர் சத்தியநாதன், கா.வினோத்குமார், அ.முத்துமணி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.