.
திருத்தணியில் மத்திய அரசை கண்டித்து பி.எஸ். என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுத்துறை மற்றும் ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேர்ந்த காலி பணியிடங்கள் நிரப்பாமல் இருக்கிறது மேலும் அரசு ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட்டு பணியிழக்கும் அபாயத்தை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத. வேலை வாய்ப்புகளை உருவாக்காத பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இயங்கும் மத்திய அரசு தொழிலாளர்கள் நலன் விரோதமாக செயல்படுகிறது தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க ஒத்துழைப்பு தராத ஆளுநர் கூட்டாட்சி தத்துவத்திற்கு குழி தோண்டி புதைக்க திட்டமிடுகிறார்.என கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.. வட்ட செயலாளர் வி. அந்தோணி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தை. மாநில குழு உறுப்பினர்.எஸ். நம்புராஜன் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் சி. பெருமாள்.ஏ. அப்சல்அகமத் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். தொடர்ந்து திருத்தணி பைபாஸ் ரயில்வே மேம்பாலம் விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். என்றும் நெசவு தொழிலை பாதுகாக்க விரைவில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். செருக்கனூர் ஆதிதிராவிடர் மக்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை உடனடியாக அமைக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கோஷங்ள் எழுப்பப்பட்டன..