ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி 18 ஆம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது. மாவட்ட தி.மு.க செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் முருகேசன் எம் எல் ஏ,தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி ஆர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உ.திசை வீரன், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் கே.கே. செல்வக்குமார், கீழக்கரை தாசில்தார் பழனி குமார், நகராட்சி துணைத் தலைவர் ஹமீது சுல்தான், தலைமை நில அளவர் சொக்கநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 13 காளைகள், 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வென்ற காளைகள், வீரர்களுக்கு பல்வேறு பரிசு வழங்கப்பட்டது, விழா ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆதித்தன் தலைமையில் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள், விளையாட்டு குழு, மகளிர் மன்றத்தினர் ஏற்பாடு செய்தனர்.