ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 6 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் எட்டுவிதமான நிறங்கள் மற்றும் ஐந்து விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், இன்வெர்டெட் எல் வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், ரிவொர்க் செய்யப்பட்ட பம்ப்பர்கள், 16 இன்ச் அலாய் வீல்கள், புதிய கிரில் மற்றும் பொனெட்டில் 3D ஹூண்டாய் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது.

காரின் உள்புறத்தில் கிரே மற்றும் பிளாக் தீம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் போஸ் 7-ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், செமி லெதர் இருக்கைகள், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், லெதர் இருக்கைகள், டோர் ஆர்ம்ரெஸ்ட்கள் உள்ளன. பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., இ.எஸ்.சி., ஹெச்.வி.ஏ.சி., வி.எஸ்.எம்., ரியர் பார்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின், ISG வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் IVT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்.பி. பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.