கோவை மாவட்டம் தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ஆர்.இந்திரா தலைமையில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரியும் தொகுப்பூதிய ANM பதவிகளில் MRB மூலம் தேர்வு செய்யும் போது முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கிடவும் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் SHU – CHN ஆகியவர்களின் ஊதிய விகித முறையீடுகளை களைந்திடவும் மாநில அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு ஆணையை அமல்படுத்திட வேண்டும். உள்ளிட்ட  பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட  தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டுமென்று தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை வைத்தனர். மாநில செயற்குழு  கூட்டத்தில் மாநில பொருளாளர் பி.பாத்திமா மேரி, மாநில பொதுச்செயலாளர் பி. நீலா மற்றும் மாநில துணைத்தலைவர்கள், மாநில இணைச்செயலாளர்கள் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.