புதுவை அரசின் பல்வேறு திட்டங்கள், செலவினங்களுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை புதுவை அரசு அனுப்பிய 32 கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமரின் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனைவருக்கும் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டு சந்தா ரூ.92 ¼ லட்சம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு ரூ.59. லட்சத்து 69 ஆயிரம் மானியம், ஹர்கர்திரங்கா பிரச்சாரத்துக்கு ரூ.47 லட்சம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். சுகாதாரத்துறை பயன்பாட்டுக்கு உயர்நிலை மயக்க மருந்து பணி நிலையத்தை வாங்க ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் செலவினத்துக்கு ஒப்புதல், நிலத்தடி நீர் ஆணைய பணியிடம் உருவாக்கல், தொடக்க கூட்டுறவு மானியமாக ரூ.1 லட்சத்து 68 ஆயிரம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு வட்டி மானியமாக ரூ.25 லட்சம்,கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு பங்களிப்பாக ரூ.5 கோடி வழங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.