கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள கொடிசியா கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் இந்தியாவில் தொழில் வளர்ச்சியை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வதில் தமிழ்நாட்டு குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் தற்போது தமிழகத்தில் பொருளாதார மந்தநிலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு பணியாளர்களின் பற்றாக்குறை மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு காரணத்தால் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.இதனால் தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிசை மற்றும் குறுமின் நுகர்வோருக்கு டிராஃபி அ(1) மின் இணைப்பு அளிக்க வேண்டும்.உயர் மின்னழுத்த கேட்புக் கட்டணம் மற்றும் சோலார் நெட்வொர்க்கிங் கட்டணம் உட்பட ஏழு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு முதல்வர் உடனடியாக பரிசீலித்து தக்க நிவாரணம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.