திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் “தமிழ் இலக்கிய மன்ற விழா” நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் செந்தில் பிரகாஷ் தலைமை தாங்கினார். இயக்குனர் திலகவதி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சுகந்தி சொர்ணலதா வரவேற்றார்.
விழாவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முன்னாள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவருமான கருணாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மாணவர் மன்ற நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பள்ளியின் மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.