காஞ்சிபுரம் அடுத்த மேல் பெரமநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள நந்தி பாபா சித்தரின் ஜீவ சமாதியில் நந்தி பாபா சித்தருக்கு அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.
நந்தி பாபா சித்தரின் ஆஸ்தான சீடரும் ஆலய நிர்வாகியுமான ஜோதிடர் திருமதி தீபா அம்மா அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமாவாசை சிறப்பு பூஜையில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நந்தி பாபா ஜீவசமாதியை வண்ண பூக்களால் அலங்கரித்து, நந்தீஸ்வரருக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு பூஜையுடன் பல வகையான கனிகள், இனிப்புகள், அறுசுவை உணவு ஆகியவை படைக்கப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.
இந்த குருபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பாபாவை வழிபட்டனர்.
குருபூஜை விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
நந்தி பாபா சித்தர் ஜீவசமாதியில் ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி அன்றும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
நந்தி பாபா சித்தரை இங்கு வந்து வேண்டிக் கொண்டால் வாழ்வில் ஏற்படும் சகல விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
அதனால் ஒவ்வொரு சிறப்பு பூஜைகளிலும் ஏராளமான பக்தர்கள் தவறாமல் கலந்து கொண்டு நந்திபாபா சித்தரை வழிபடுகின்றனர்.