தாம்பரம் முடிச்சூர் பகுதியில் அமைந்துள்ள Dragon School of Arts  பள்ளி சார்பாக தற்போது மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதைத் தடுக்கும் விதமாக மாணவர்களை ஊக்குவிக்க சதுரங்கப் போட்டி மற்றும் வரைபட போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. 

இது சம்பந்தமாக பள்ளியின் நிறுவனர் மாஸ்டர் இந்திரன் அவர்கள் கூறுகையில், மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால் மாணவர்கள் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். அதனைத் தடுக்கும் விதமாக மாணவர்களுக்கு உள் மற்றும் வெளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறச் செய்வதன் மூலம் மாணவர்களிடையே தொலைபேசியின் பயன்பாட்டை தவிர்க்க முடியும் என்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கம் எனக் கூறினார்.