தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியப்பபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு குளத்தூர் ஐயன் திருக்கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது  

அதன்படி புதன்கிழமை குளத்தூர் ஐயனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கேரளா பிண்ணனி பாடகர்கள் இணைந்து வழங்கிய பிரைட் இன்னிசை கச்சேரியும், வியாழக்கிழமை கணபதி ஹோமம் மதியம் கேரள மாநிலம் குளத்துபுழாவில் இருந்து புனித நீர் எடுத்து வந்து குளத்தூர் ஐயனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, வெள்ளிக் கிழமை மதியம் அன்னதானம் நிகழ்ச்சியும் மாலையில் பொதிகை சிலம்பாட்ட நிகழ்ச்சியும், இரவு பொதிகை சாரல் இன்னிசை கச்சேரியும் இரவு சிறப்பு வானவேடிக்கை நடைபெற்றது. சனிக்கிழமை 108 அணிகள் மோதும் மாபெரும் கபடி போட்டி நடைபெற உள்ளது திருவிழா ஏற்பாடுகளை அரியப்பபுரம் குளத்தூர் ஐயன் நாடார் வகையறா தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ஐயன் கபாடி குழுவினரும் சிறப்பாக செய்திருந்தனர்.