சேலம் மாவட்டம் மல்லூர் சந்தைப்பேட்டையில் மல்லூர் முதல் நிலை பேரூராட்சி வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம்  நடைபெற்றது. தலைவர் லதா அய்யனார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அய்யனார் செயல் அலுவலர் ராணி முன்னிலை வகித்தனர். 1 டு 15 வார்டுகளில் இக்கூட்டம் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகளில் சாலைகள் சீரமைக்கவும், குடிதண்ணீர் வசதி, சாக்கடைகள் அமைக்கவும்,தெருவிளக்கு தேவை என்றும் பல்வேறு விதமான கோரிக்கைகள் முன்வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவு செய்யப்படும்.என தலைவர் லதா அய்யனார் தெரிவித்தார்.மேலும் இக்கூட்டத்தில் ஒன்னாவது வார்டு முதல் 15 வது வார்டு அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கவுன்சிலர்கள் செல்லம்மாள், தவமணி,தினேஷ், கலைச்செல்வி,மோகனப்பிரியா, சந்திரா மற்றும் அலுவலகப் பணியாளர்கள்,ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.