பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி தகுதியின் அடிப்படையில் ரூ. ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்து அதை தொடங்கி வைத்த நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பாக திருத்தணியில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ் சந்திரன் வழிகாட்டுதலின்படி திருத்தணி பைபாஸ் பகுதியில் தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் நிகழ்ச்சியில் தொ.மு.ச. தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் டி. இராமதாஸ். மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் வி. எம். ஆர். நரேந்திரன். மாவட்ட அமைப்பாளர் எம். சீனிவாசன் ஆதி திராவிட நல அணி துணை அமைப்பாளர் குணசேகரன் திருத்தணி கிழக்குஒன்றிய துணை செயலாளர் எம். பாபு நகர 3 வது வட்ட அமைப்பாளர் எ. கார்த்திகேயன். டி.வி. புரம் கிளை செயலாளர் பி. பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.