இராமநாதபுரம் நகரசபை கூட்டத்தில் வரிவிதிப்பு குழு உறுப்பினர் வரிவசூல் மற்றும் வரிவிதிப்பு சம்மந்தமாக ஆலோசனை செய்யவில்லை எனக் கூறி ராஜினாமா செய்ததாய் பரபரப்பு ஏற்பட்டன. கீழக்கரை நகரசபை கூட்டம் சேர்மன் செகா னாஸ்ஆபிதாதலைமையில் உதவி சேர்மன் ஹமீது சுல்த்தான் முன்னிலையில் நடைபெற்றது. நகரசபை கமிஷனர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். மொத்தம் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் பேசும்போது தெருவோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,. மழைக்காலம் தொடங்குவதால் அடிக்கடி மின் தட்டுப்பாடு நிகழ்வதால் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள். வரிவிதிப்பு கமிட்டி உறுப்பினர்களிடம் வரிவிதிப்பு சம்மந்தமாக எந்தவித ஆலோசனையும் செய்யவில்லை எனக் கூறி ராஜினாமா அறிவித்தார். இதனால் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் உதயா நன்றி கூறினார்.