சேலம் மாவட்ட பவர் லிப்டிங் அசோசியேசன் அலுவலகத்தில் மாநில பெஞ்ச் பிரஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவையில் தமிழ்நாடு மாநில பெஞ்சு பிரஸ் போட்டி நடைபெற்றது .அதில் மாஸ்டர்ஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாதேஷ் 60 வயது உட்பட்ட பிரிவில் இரண்டு தங்கம் ,ராஜகோபால் 70 வயது உட்பட்ட பிரிவில் ஒரு தங்கம் ,பாலகிருஷ்ணன் 80வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரண்டு தங்கம் வென்று வெற்றி பெற்றுள்ளார்கள்.இவர்கள் சேலம் மாவட்ட கௌரவத் தலைவர் மற்றும் கொண்டலாம்பட்டி மண்டல தலைவர் அசோகன், மாவட்ட பவர் லிப்டிங் அசோசியேசன் தலைவர் ஓ டெக்ஸ் இளங்கோவன், செயலாளர் பொன் சடையன், பொருளாளர் பிரேம்குமார் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர் .மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மேட்டூர் கிளை மென்ஸ் மிஸ்டர் தமிழ்நாடு ,மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மாநில இளைஞரணி நிர்வாக அமைப்பாளர் ஆர். வி. பாபு ,மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலைய தலைவர் தெய்வ பிள்ளை, சமூக சேவகர் தொழிலதிபர் கோல்ட் தேவா ,உடற்கல்வி இயக்குனர் வடிவேல், சமூக ஆர்வலர் ஜீவா ,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.